பெயர்கள் முரண்பாடுகளை களைந்திட கண்டறியப்பட்ட விண்ணப்பங்கள் மீது வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை நகராட்சி காந்தி சாலை மற்றும் வாலாஜா வட்டம் தென் நந்தியாலம் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவிலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த 2026 பணி, வரைவு வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் பெயர்கள் முரண்பாடுகளை களைந்திட, கண்டறியப்பட்ட விண்ணப்பங்கள் மீது நேரடியாக கள ஆய்வு செய்து, வாக்காளர்கள் விவரங்களை சரி பார்க்கும் பணிகள் மேற்கொண்டு வருவதை, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆஷிம் குமார் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து, விவரங்கள் கைபேசியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உறுதி செய்யப்படுவதையும் ஆய்வு செய்தார். மேலும், வாக்காளர்களிடம் அப்பணிகள் குறித்து கருத்துகளையும், எளிமையாக இருந்ததா அல்லது வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு அடிக்கடி மற்ற இடங்களுக்கு சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை தொடர்பு கொண்டீர்களா? என்பதை கேட்டறிந்தார்.

அப்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீட்டிற்கு வருகை தந்ததாகவும், தற்போது முரண்பாடுகளை, களையும் பணிகளிலும் நேரடியாகவே கள ஆய்வு செய்து, எவ்வித சிரமம் இன்றி எங்களுக்கு எளிதில் தீர்வுகளை அளித்து வருகின்றனர் என வாக்காளர் பட்டியல் பார்வையாளரிடம், வாக்காளர்கள் தெரிவித்தனர். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: