மதவெறியை மாய்ப்போம்; மகாத்மாவைப் போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

சென்னை: மதவெறியை மாய்ப்போம்; மகாத்மாவைப் போற்றுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். மகாத்மா காந்தியின் 74 வது நினைவுநாளையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் சேகர்பாபு. மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது;

மதவெறியை மாய்ப்போம்! மகாத்மாவைப் போற்றுவோம்!

அமைதிவழியின் வலிமையை உலகுக்குக் காட்டி, ஒற்றுமையுணர்வு தழைக்கப் பாடுபட்டதால், கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள், ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நிலைத்து வாழ்வார்!

மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டி, காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: