சேரம்பாடி டேன்டீயில் குறுமிளகு பறிக்காததால் வருவாய் இழப்பு

*ஆண்டுக்கு 15 டன் மகசூல் வீணாகும் அபாயம்

பந்தலூர் : சேரம்பாடியில் உள்ள அரசு தேயிலைத் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள குறுமிளகு அறுவடை செய்யப்படாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக தோட்டத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழ்நாடு அரசு தேயிலைத்தோட்ட கழகம் டேன்டீ சேரம்பாடியில் சரகம் 1 முதல் 4 வரையுள்ள தேயிலைத்தோட்டத்தில் தேயிலை செடிகளுக்கு இடையே உள்ள சில்வர்வொக் மரங்களில் குறுமிளகு பயிரிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் டேன்டீ நிர்வாகம் குறுமிளகு சீசன் காலத்தில் ஒப்பந்ததாரர்கள் மூலம் டெண்டர் விடப்பட்டு வருவாய் ஈட்டி வந்தனர்.தற்போது குறுமிளகு சீசன் தொடங்கியுள்ள நிலையில் தற்போது வரை குறுமிளகு பறிக்காமல் இருந்து வருகிறது.

தற்போது குறுமிளகு பழுத்து உதிரும் நிலை ஏற்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்ெடான்றிற்கு சுமார் 15 ஆயிரம் கிலோ குறுமிளகு மகசூல் கிடைப்பதாக தெரியவருகிறது.

இதன்மூலம் டேன்டீ நிர்வாகத்திற்கு நல்ல வருவாய் கிடைத்து வந்த நிலையில் தற்போது குறுமிளகு அறுவடை செய்யாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

தற்போது பச்சை குறுமிளகு கிலோ ஒன்றுக்கு ரூ.180ம் ,காய்ந்த குறுமிளகு கிலோ ஒன்றுக்கு ரூ.650 வரை சந்தை விலை உள்ளநிலையில், அரசு தேயிலைத் தோட்டத்திற்கு கூடுதல் வருவாய் தரக் கூடிய குறுமிளகு அறுவடைக்கான டெண்டரை உடனே அறிவித்திட வேண்டும் என தோட்டத் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: