சென்னை: தமிழகப் பள்ளிகளில் ஜியோவின் புதிய AI கல்வித் திட்டத்தில் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. ஜியோ AI கிளாஸ்ரூம் என்ற நான்கு வார இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதிய AI கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஜியோ மற்றும் கூகுள் ஜெமினி (Google Gemini) இணைந்து மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை கல்வித் துறையில் புகுத்துகின்றன. இதன் முக்கிய அங்கமாக, ‘ஜியோ AI கிளாஸ்ரூம்’ என்ற நான்கு வார இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது.. இதில் மாணவர்கள் AI-ன் அடிப்படை அம்சங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
மேலும், ஜியோவின் அன்லிமிடெட் 5G வாடிக்கையாளர்களுக்கு சுமார் ரூ.35,100 மதிப்புள்ள Google Gemini Pro சந்தா 18 மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தச் சலுகையின் மூலம் 2 TB அளவிலான கிளவுட் ஸ்டோரேஜ், உயர்தரப் படங்களை உருவாக்கும் ‘Nano Banana Pro’ மற்றும் வீடியோக்களை உருவாக்கும் ‘Veo 3.1’ போன்ற நவீன கருவிகளைப் பயன்படுத்த முடியும்.
இத்திட்டம் ஆசிரியர்களுக்குப் பாடத்திட்டங்களை வடிவமைக்கவும், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
