புழல் காந்தி பிரதான சாலையில் திருமூலநாதர் கோயில் கும்பாபிஷேகம்

புழல்: சென்னை புழல் காந்தி பிரதான சாலையில் உள்ள ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை திருமூல நாதர் சாமி கோயில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட புராதனமான கோயில். இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்றதை அடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கி தொடர்ந்து 27ம் தேதி வரை ஓமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை நடைபெற்று கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்துக்கு புழல், கதிர்வேடு , சூரப்பட்டு, லட்சுமிபுரம் ரெட்டேரி ,செங்குன்றம் ,சோழவரம், பாடியநல்லூர், வடகரை, வடபெரும்பாக்கம் ,மாதவரம், மணலி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்னர். பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தலைவருமான பி.கே.சேகர்பாபு, எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகோபால், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் புழல் ஜெ. ரவி, முன்னாள் அறங்காவலர்கள் குணசேகரன், லட்சுமி நீதி ராஜன், பகுதி செயலாளர்கள் புழல் நாராயணன், மாதவரம் துக்காராம், வட்ட திமுக செயலாளர்கள் சுந்தரேசன், சந்துரு, குப்பன், மாநகராட்சி கவுன்சிலர்கள், இந்து சமய அறநிலையதுறை அலுவலர்கள், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.

புழல் நட்பு வட்டாரம் சங்கத்தின் சார்பில் காலை சிற்றுண்டி, மதியம் அன்னதானம், குளிர்பானம் வழங்கப்பட்டது. புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: