41 குடும்பங்களை அனாதையாக்கி விட்டார் : விஜய் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்த எடப்பாடி பழனிசாமி!!

சேலம் : அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுகவில் இணைக்க டிடிவி எடப்பாடியிடம் பரிந்துரைக்க வேண்டும் என்றும் ஒன்றிணைப்புக்கு நான் தயார், எடப்பாடி தயாரா என்றும் ஓ.பன்னீர்செல்வம் பேசியிருந்தார். இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி விவகாரத்தில் அதிமுக மிக தெளிவாக செயல்பட்டு வருகிறது. இன்னும் சில கட்சிகளுடன் பேசி வருகிறோம்; அது இறுதியான பின் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம். அதிமுக பொதுக்குழுவில் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டு, ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருந்து நீக்கப்பட்டுவிட்டார். நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது.

அதனால் அதிமுகவில் அவரை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. முறையாக திட்டமிடாததால்தான் கரூரில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.நடிகர் என்றால் கூட்டம் வரத்தான் செய்யும். 41 உயிர்கள் பறிபோய் இருக்கிறது. அவரைப் பார்க்க வந்ததால் தான் இறந்தார்கள். விஜய் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சிறந்த அரசியல் கட்சி நாங்கள்தான். நாங்கள்தான் இதுவரை மக்களுக்கு சேவை செய்கிறோம், குரல் கொடுக்கிறோம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்ததாக விஜய் சொல்கிறார்?. யாருக்காக அதை விட்டுவிட்டு வந்தார்?. கட்சி வேறுபாடுகள் பார்க்காமல் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினோம்.

அரசாங்கம் நடத்த அனுபவம் இருக்க வேண்டும். எனக்கு அரசியலில் 51 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. அரசியல் என்று வந்துவிட்டால் மக்களை நேரில் சென்று சந்திக்க வேண்டும். கரூர் துயர சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத விஜய் ஒரு தலைவரா?. அவர்களுக்கு ஆறுதல்கூட தெரிவிக்க முடியவில்லை, கட்சி நடத்தி என்ன செய்வது?.கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை விஜய் அனாதையாக்கிவிட்டார்.” இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: