ரயில் நிலைய பெயர் பலகைகளில் இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் புதிய சர்ச்சை

 

சென்னை: ரயில் நிலைய பெயர் பலகைகளில் இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலத்துக்கு கீழே இந்தியில் பெயர் எழுதப்பட்டிருக்கும். அண்மைக் காலமாக ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பெயர் பலகையின் நடுவில் பிரதானமாக எழுதியுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்கு ரயில் நிலைய பெயர் பலகைகளை பயன்படுத்தப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் இந்தியை பிரதான இடத்தில் எழுதுவதன் நோக்கம் என்ன என்று மொழி ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: