நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக போராட்டம் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மற்றும் போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் தொடர்ந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பிரசன்னா.பி.வரலே ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,\\” நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்காக அவர் தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுகிறார்.

அவருக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதோடு போராட்டங்களும் நடத்தப்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டும். குறிப்பாக யூடியூபர்கள் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறையும் அல்லது தமிழக அரசு எடுப்பதில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள்,‘‘ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு எதிராக நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துவது, அவருக்கு எதிராக அவதூறு பரப்புவது ஏற்க கூடியது கிடையாது.

அதுபோன்று செயல்படுபவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதும், அவதூறு கருத்துக்கள் பரப்பியவர்கள் மீதும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தமிழ்நாடு தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: