ஜனாதிபதி உரை அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்கிறது: இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் டி.ராஜா எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரை, நாடு எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளைத் தொடத் தவறிவிட்டது. அதில் எந்த ஒரு பொருள் மற்றும் பொறுப்புக்கூறல்களும் இல்லை. மோடி அரசாங்கத்தின் தோல்விகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப, ஜனாதிபதியின் உயர்ந்த அரசியலமைப்பு அந்தஸ்து ஒரு கேடயமாக பயன்படுத்தப்படுகிறது.

மணிப்பூர் கலவரம், ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக நடைமுறைகள் இன்னும் சீரான நிலைக்கு வரவில்லை. டெல்லி செங்கோட்டை வெடிகுண்டு தாக்குதல், கேரளா மற்றும் இதர மாநிலங்களை பொருளாதார ரீதியாக நசுக்குவது உள்ளிட்ட பிரச்னைகள் உரையில் இடம் பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் எம்பி சந்தோஷ்குமார்,இது அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு விட்டதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் பொது விநியோக திட்டத்தின் கீழ் 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்களை அரசு வழங்கி வருகிறது. நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்த மக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக அரசு தெரிவித்துள்ளது. அது உண்மை என்றால் இன்னும் கோடிக்கணக்கான மக்கள் இலவச உணவை நம்பி இருக்கும் நிலை ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்று கேள்வி கேட்டார்.

Related Stories: