தமிழகத்தில் 2 நாட்களுக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 2 நாட்களுக்கு பிறகு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் வறண்ட வானிலைக்கு இடையே, திருநெல்வேலி, நீலகிரி, மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவியது. வெப்பநிலையை பொருத்தவரையில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் குறைந்துள்ளது. பிற பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இல்லை.

இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 31ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரையில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும். மேலும், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று, சூறாவளி காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும். நாளை, குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60கிமீ வேகத்தில் வீசும். எனவே மேற்கண்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர், என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: