மின்சார பேருந்துகள் லாபத்தில் இயங்குகின்றன: அமைச்சர் சிவசங்கர் தகவல்

 

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன், பேசுகையில் சென்னையில் தனியாருக்கு பேருந்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. எனவே இது தொடர்பாக பேரவையில் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மின்சார பேருந்து தான் தனியார் ஒப்பந்த பேருந்தாக இயக்கப்படுகிறது.பேருந்தை தயார் செய்யும் நிறுவனம் அதன் துணை நிறுவனம் மூலம் பேருந்தை இயக்கி வருகிறது.மின்சார பேருந்துகள் லாபகரமாக இயங்கி வருகிறது. எந்த நஷ்டமும் இல்லை” என பதிலளித்தார்.

Related Stories: