சென்னை : ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் வரும் ஜனவரி 27ம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் ஜன.27ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்று தர தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து சென்சார் போர்டு வழக்கு தொடர்ந்துள்ளது.
