5 மாநில தேர்தல் ஏற்பாடுகள் பாஜ புதிய தலைவர் நிர்வாகிகளுடன் ஆலோசனை

புதுடெல்லி: பாஜவின் புதிய தேசிய தலைவராக நிதின்நபின் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து நேற்று அவர் கட்சி நிர்வாகிகளுடன் முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். நாள் முழுவதும் நடந்த இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட அளவில் அமைப்பை மேலும் வலுப்படுத்துமாறு நிதின் கேட்டுக்கொண்டார்.

மேலும் விபிஜிராம்ஜி திட்டத்தின் நன்மைகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தும்படி அவர் வலியுறுத்தினார். இதன் மூலமாக விபி ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் எதிர்மறை பிரசாரத்தை முறியடிக்குமாறும் நிர்வாகிகளிடம் அவர் அறிவுறுத்தினார். மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்கள் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்தும் அவர் விவாதித்தார்.

Related Stories: