புதுடெல்லி: மொசாம்பிக்கை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் கிராசா மாசெலுக்கு இந்திரா காந்தி அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, பொருளாதார மேம்பாட்டில் ஆற்றிய மனிதாபிமான பணிகள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு மொசாம்பிக்கை சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான கிராசா மாசெல்லுக்கு அமைதிக்கான பரிசு வழங்கப்படவுள்ளதாக டெல்லியில் உள்ள இந்திராகாந்தி நினைவு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
