புதுடெல்லி: குடியரசு தலைவர் மாளிகையின் செயலகம் நேற்று வௌியிட்ட அறிவிப்பில், “குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள அமிர்த தோட்டம் பொதுமக்கள் பார்வையிட 2026 பிப்ரவரி 3ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை திறக்கப்படும்.மக்கள் வாரத்தின் ஆறு நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை(கடைசி நுழைவு மாலை 5.15 மணி) தோட்டத்தை பார்வையிடலாம்.
பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள்கிழமையும், ஹோலிப்பண்டிகையை முன்னிட்டு மார்ச் 4ம் தேதியும் அமிர்த தோட்டம் மூடப்பட்டிருக்கும். இந்த தோட்டத்தை கட்டணமின்றி பார்வையிடலாம். இதற்காக, https://visit.rashtrapathibhavan.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக மக்கள் தங்கள் வருகையை முன்பதிவு செய்யலாம் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
