சென்னை: டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 1.39 லட்சம் ஏக்கர் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.111.96 கோடியை ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 84,848 விவசாயிகள் பயன்பெறும் வகையில் நிவாரணத் தொகையாக ரூ.111.96 கோடி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
