ராஜபாளையம், ஜன. 14: ராஜபாளையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை அரசுப்பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். ராஜபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இந்திய தர நிர்ணயம் சார்பில் குடிநீர் சுத்திகரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலையை மாணவர்கள் பார்வையிட அழைத்துச் சென்றனர். தலைமை ஆசிரியர் முருகன் தலைமையிலும் உதவி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், இளங்கோவன் முன்னிலையிலும் பொறுப்பாசிரியர் தங்க ரேவதி, ஓவிய ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் பங்கேற்று மாணவர்களை பேருந்தில் அழைத்துச் சென்றனர்.
திருத்தங்கல் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் மேலாளர் முன்னிலையில் ஆய்வக உதவியாளர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பதை மாணவர்களுக்கு விளக்கினர். ஆசிரியர் இளங்கோவன், தாது உப்புக்கள் சத்துகள் எவ்வாறு குடிநீருடன் இணைக்கப்படுகின்றன என்பதை மாணவர்களுக்கு விளக்கினார். இந்திய தர நிர்ணயம் சார்பில் மாணவர்களை அழைத்துச் சென்றது பயனுள்ளதாக இருந்தது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
