விருதுநகர், ஜன. 14: விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிரை வண்ணார் சமூகத்தினருக்கு ஜாதி சான்றிதழ், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என ஆதிதிராவிடர் நலத்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் புதிரை வண்ணார் சமூகத்தினருக்கு சாதிச்சான்றிதழ்கள், ஆதார், வாக்களார் அடையாள அட்டைகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் தாசில்தார் அலுவலகங்களில் நடைபெற உள்ளன.
அதன்படி இந்த முகாம்கள் நடைபெறக்கூடிய இடங்களின் விவரங்கள்:
சிவகாசி ஜன.20, ராஜபாளையம் ஜன.21, வில்லிபுத்தூர்- ஜன.22, வத்திராயிருப்பு- ஜன.23, வெம்பக்கோட்டை-ஜன.27, சாத்தூர்- ஜன.28, அருப்புக் கோட்டை-ஜன.29, காரியாபட்டி- ஜன.30, திருச்சுழி-ஜன.30 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
