- திருவாடானை
- ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு
- திருவாடானை அதிரெத்தினேஸ்வரர் கோவில்
- மாவட்ட விவசாயிகள் சங்கம்
- ராஜா
- தம்பிராசு
- கவாஸ்கர்
திருவாடானை, ஜன.14: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, தம்பிராசு, கவாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களும் பாசன வசதி பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கோட்டக்கரை ஆற்றில் சனவேளி அருகே தடுப்பணை கட்டித்தர வேண்டும். மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானை தாலுகாவில் அரசின் அரிசி ஆலை அமைத்து தர வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
