×

டூவீலர் மோதி வாலிபர் படுகாயம்

 

சிவகாசி, ஜன.14: சிவகாசி அருகே டூவீலர் மோதி வாலிபர் படுகாயமடைந்தார்.
வில்லிபுத்தூர் அருகே மங்காபுரத்தை சேர்ந்தவர் அய்யனார்(40). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அய்யனார் சம்பவத்தன்று தனது டூவீலரில் சிவகாசி – சாத்தூர் ரோடு மயிலாடும்துறை அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டூவீலர் அய்யனார் மீது மோதியது. இதில் அய்யனாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தை ஓட்டி வந்தவரை தேடி வருகின்றனர்.

 

Tags : Sivakasi ,Mangapuram ,Villiputhur ,Aiyanar ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை