×

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

 

சிங்கம்புணரி, ஜன.14: சிங்கம்புணரி அருகே வேங்கைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (48). இவர் கடந்த 10ம் தேதியன்று, தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். இந்நிலையில் நேற்று மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் உள்ளே பொருட்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் உள்ளே பீரோவில் வைத்திருந்த 17 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது. இது குறித்து அவர், சிங்கம்புணரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Singampunari ,Shanmugasundaram ,Vengaipatti ,Tirupati ,Lord Shiva ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை