- மஞ்சலரு அணை
- தேவதானப்பட்டி
- மாவட்ட கலெக்டர்
- ரஞ்சீத் சிங்
- கொடைக்கானல் மலைகள்
- மேற்குத்தொடர்ச்சி
- மஞ்சலரு
- வரட்டாரு
- இருட்டாறு
தேவதானப்பட்டி, ஜன. 14: தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் திறந்து வைத்தார். மேற்கு தொடர்ச்சிமலைகளில் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது மஞ்சளாறு அணை. இந்த அணைக்கு மஞ்சளாறு, வரட்டாறு, இருட்டாறு, தலையாறு ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த அணையின் மொத்த உயரம் 57 அடியாகும், மொத்த கொள்ளளவு 487.35 மில்லியன் கன அடியாகும்.
இதில் பழைய ஆயக்கட்டு பாசனப்பரப்பு 3386 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு(வலது பிரதானக்கால்வாய்) பாசனப்பரப்பு 1873 ஏக்கரும், தேனி மாவட்டத்தில் 3148 ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2111 ஏக்கரும் மொத்த இரண்டு மாவட்டங்களில் சேர்ந்து 5259 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அணையின் மூலம் கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, கணவாய்பட்டி, பரசுராமபுரம், கட்டகாமன்பட்டி, வத்தலக்குண்டு, பழையவத்தலக்குண்டு, குன்னுவாரன்கோட்டை, சிவஞானபுரம் உள்ளிட்ட இடங்கள் பாசன வசதி பெறுகிறது.
