குன்னூர் ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு

குன்னூர் : குன்னூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டம் சிறப்பு வாய்ந்த பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.

அதில் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தது நீலகிரி மலை ரயில். இந்த மலை ரயிலில் பயணம் செய்வதற்காகவே உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.

அவ்வாறு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே காவல்துறை. குன்னூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு இரும்புப் பாதை காவல்துறை சார்பாக நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக நாளுக்கு நாள் அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளிடையே சில இடங்களில் திருடர்கள் வலம் வருகின்றனர்.

ஆகவே சுற்றுலா பயணிகள் தங்களின் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும், ரயிலிலோ அல்லது ரயில் தண்டவாளங்களிலோ புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து ரீல்ஸ் பதிவிட கூடாது என பல்வேறு அறிவுரைகள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கினர்.

Related Stories: