முழுமையாக நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கும் காட்டேரி அணை

ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே காட்டேரி அணை உள்ளது. இந்த அணை, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது. காட்டேரி அணையில் இருந்து தண்ணீரை ராட்சத குழாய்கள் மூலம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது தவிர உள்ளூர் பொதுமக்களும் பயன்படுத்துகின்றனர்.

இந்த அணை தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்புகளுக்கு மத்தியில் ரம்மியமாக காட்சியளிக்கும். இந்த அணைக்கு அருகில் காட்டேரி அருவியும் உள்ளது. பருவ மழையின்போது அணையின் மேற்புறமுள்ள விளைநிலங்களுக்கு நடுவே வரும் நீரோடைகளில் வரும் தண்ணீர் அணைக்கு வந்து சேரும்.

அவ்வாறான சமயங்களில் காட்டேரி அணை நிரம்பி உபரிநீர் வெளியேறுவதுண்டு. கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே மே மாதத்திலேயே துவங்கி சுமார் 3 மாதங்கள் நல்ல மழை பொழிவு இருந்தது.

இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழுமையாக நிரம்பின. இதேபோல் காட்டேரி அணை பகுதியிலும் நல்ல மழை பொழிவு இருந்ததால், காட்டேரி அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்தது. தற்போது மழை குறைந்த போதும், அணை முழுமையாக நிரம்பி காட்சியளிக்கிறது. இந்த நீர், அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர் நிரம்பி காட்சியளிக்கும் அணையை பார்க்கும்போது ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

Related Stories: