சென்னை: பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் ஜன.18 வரை பெயர் சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.24,25 முகாம்கள் நடத்த வேண்டும் என கோரியுள்ளோம். விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.28 வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
