சென்னையில் 3 புறநகர் மின்சார ரயில்கள் இன்று நிறுத்தம்

 

சென்னை: சென்னையில் 3 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு பகல் 12.40க்கு புறப்படும் மின்சார ரயில் இன்று ரத்து. மூர் மார்க்கெட் – கும்மிடிப்பூண்டிக்கு காலை 10.30க்கு புறப்படும் ரயில் இன்று முழுமையாக ரத்து. கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரைக்கு காலை 10.55க்கு புறப்படும் மின்சார ரயில் இன்று முழுமையாக ரத்து செய்துள்ளது.

Related Stories: