விம்கோ நகர் மெட்ரோ நிலையத்தில் எஸ்கலேட்டர், லிப்ட்டுடன் புதிய நுழைவாயில் திறப்பு

சென்னை: பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தும் விதமாக விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் திருவொற்றியூர் சாலையோரம் மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டு வசதிகளுடன் உடைய கூடுதல் நுழைவுவாயில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் வசதியினை, அருகிலுள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்யா (இயக்கம் மற்றும் பராமரிப்பு), பொது மேலாளர் சதீஷ் பிரபு (இயக்கம் மற்றும் பராமரிப்பு), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: