நாகை-இலங்கை கப்பல் சேவை வரும் 18ம்தேதி மீண்டும் துவக்கம்

நாகப்பட்டினம்: தமிழகம் முழவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. இதனால் கடலில் சீற்றம் மற்றும் கன மழை பெய்தது. இந்நிலையில் உருவான டிட்வா புயலின் தாக்கம் காரணமாக தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயல் தாக்கத்தால் இலங்கை காங்கேசன் துறைமுகம் கடுமையாக சேதமடைந்தது. இதையடுத்து, நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவை கடந்த அக்டோபர் 26ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இலங்கை காங்கேசன் துறைமுக சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றள்ளது. இதையடுத்து நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறையிலான கப்பல் சேவை மூன்றரை மாதங்களுக்கு பின் வரும் 18ம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த முறை நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவையின் போது பயணிகள் அதிகம் செல்லும் வகையில் புதிய கப்பல் இயக்கப்படும் என சுபம் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: