தொடங்கியது சீசன் பனங்கிழங்கு விற்பனை அமோகம்

சிவகாசி, ஜன. 8: சீசன் தொடங்கி உள்ளதால் சிவகாசி பகுதியில் பனங்கிழங்கு விற்பனை மும்முரமாக நடக்கிறது. தமிழர் பண்டிகையான பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருபவைகளில் முக்கியமான ஒன்று பனங்கிழங்குதான். இந்த ஆண்டு பனங்கிழங்கு சீசன் தொடங்கி உள்ளது. தலை பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டார் சார்பில் சீதனங்களுடன் பனங்கிழங்கும் வழங்குவது மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை சில நேரங்களில் மார்ச் மாதம் வரை பனங்கிழங்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தற்போது பனங்கிழங்கு சீசன் தொடங்கி உள்ளது. இதனால் சிவகாசியில் சிவன் கோயில் சந்திப்பு, மார்க்கெட் பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளில் பனங்கிழங்கு விற்பனை ஜோராக நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை, மம்சாபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பனங்கிழங்குகளை ஏராளமான விவசாயிகள் கட்டுகளாக கட்டி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். 10 கிழங்குகள் உள்ள ஒரு கட்டு ரூ.50 முதல் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் மார்கழி, தை ஆகிய இரு மாதங்களில் மட்டுமே கிடைக்கும் பனங்கிழங்கு, மருத்துவ குணமுள்ள இயற்கை உணவுப்பொருள் என்பதால், விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் மக்கள் விரும்பி வாங்கி சுவைத்து வருகின்றனர். இதனால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

 

Related Stories: