பந்தலூரில் பொங்கல் தொகுப்பு வழங்கல்

பந்தலூர், ஜன.9:பந்தலூரில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு பந்தலூர் தாசில்தார் சிராஜுன்னிஷா தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி மற்றும் திமுக நகர கழக செயலாளர் சேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் அமிர்தலிங்கம், நகர்மன்ற தலைவர் சிவகாமி ஆகியோர் முன்னிலையில் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பாக அரிசி,வெல்லம்,கரும்பு வழங்கப்பட்டது.

நிகழ்வில் கவுன்சிலர்கள் சாந்தி புவனேஷ்வரன், முரளிதரன், வார்டு செயலாளர் பன்னீர்செல்வம், ஐடிவிங் பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ 3 ஆயிரம் ரொக்கத்தை பெற்றுக்கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். வட்ட வழங்கள் அலுவலர் விஜயன் கூறுகையில், பந்தலூர் வட்டத்தில் உள்ள 45 ரேஷன் கடைகளில் 30 ஆயிரத்து 454 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

 

Related Stories: