அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை

குன்னூர்,ஜன.9: குன்னூரில் பழங்குடியின கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கொடியுடன் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மேலூர் ஊராட்சிக்குட்பட்ட மூப்பர்காடு, ஊஞ்சலார் கொம்பை, பால்மராலீஸ் போன்ற பகுதிகளில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அப்பகுதியில் பல ஆண்டுகளாக பல்வேறு அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யாமல் இருப்பதாகவும், அடிப்படை வசதிகள் விரைவில் செய்துதரக்கோரி நேற்று பழங்குடியின மக்கள் பலர் ஒன்றிணைந்து கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர்.

தொடர்ந்து சார் ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் கிராமங்களுக்கு நேரில் வந்து முறையாக ஆய்வு மேற்கொண்டு இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கொடி ஏந்தியவாறு கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த பழங்குடியின மக்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related Stories: