போடி, ஜன.9: தேனி அருகே உள்ள மாணிக்காபுரம் நடுத்தெரு இந்திரா காலனியைச் சேர்ந்தவர் கனகராஜ்(41). எரணம்பட்டி தனியார் சோலார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 22ம் தேதி ராசிங்காபுரத்திலிருந்து கரையாம்பட்டி சாலை கீழப்பட்டி அருகே உடன் வேலை செய்யும் தங்கபாண்டியன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தேவாரம் காளியம்மன் கோயில் வடக்கு தெருவை சேர்ந்த ராசையா மகன் சரவணன் என்பவர் காரில் வேகமாக வந்து இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்தினார். இதில் கனகராஜுக்கு இடது காலில் காயம் அடைந்தார். இவரது மனைவி பாண்டீஸ்வரி போடி தாலுகா காவல் நிலையத்தில் கார் ஓட்டி வந்த சரவணன் மீது நேற்று நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார்.
