கோவை, ஜன. 9: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ‘‘கோவை மாவட்டத்தில் உள்ள குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் கரையோரங்களில் கட்டிடக்கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவது அதிகரித்து வருகிறது.
பேரூர் பகுதியில் உள்ள சொட்டையாண்டி குட்டை அருகே 3 லாரிகளில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டன. இதன் காரணமாக நீர் நிலைகள், நிலத்தடி நீர் மற்றும் பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
