போடி, ஜன.8: சின்னமனூர் அருகே கன்னிசேர்வைபட்டி அழகர்சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் சுரேஷ்(43). தனியார் பஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். போடி அருகே நாகலாபுரம் வடக்குப்பட்டியில் மனைவி நந்தினி(34), குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சுரேஷ் டூவீலரில் நாகலாபுரத்திலிருந்து சங்கராபுரம் நோக்கி மாநில நெடுஞ்சாலையில் சென்று கொண்டி ருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த கார் முன்னால் சென்ற டூவீலரில் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், சுரேஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி நந்தினி அளித்த புகாரின்பேரில் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
