ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அன்புமணி பாமக, அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளார்.
ஓபிஎஸ் தவெக கூட்டணியில் இணைவாரா? என்ற கேட்கிறீர்கள். எல்லோரும் வருவார்கள்; அன்போடு கதவு திறக்கப்பட்டிருக்கிறது. வைகை செல்வனுக்கு தேர்தலில் சீட் கூட கொடுக்கவில்லை. அவரால் ஜெயிக்கவும் முடியல. யார், யாருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற தகுதி இருக்கிறது’’ என்றார்.
