திண்டுக்கல்லில் அடுத்தடுத்து பயங்கரம் தம்பதி வெட்டி படுகொலை: பழிக்குப்பழியால் பரபரப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பழிக்குப்பழியாக கணவன், மனைவி அடுத்தடுத்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் ஜேசுராஜ் (45). இவர் மீது 2024ம் ஆண்டு மாயாண்டி ஜோசப் என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளது.
தற்போது ஜாமீனில் வெளியில் வந்திருந்த ஜேசுராஜ் நேற்றிரவு 7.30 மணியளவில் நத்தம் சாலை ஆர்எம்டிசி நகர் அருகே டூவீலரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது காரில் வந்த மர்மக்கும்பல் இவரை வழிமறித்து வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியும், தலையை சிதைத்தும் கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டது. தொடர்ந்து, யாகப்பன்பட்டியில் உள்ள ஜேசுராஜ் 2வது மனைவி தீபிகாவையும் வீட்டின் முன்பு வைத்து ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றது.

முதல்கட்ட விசாரணையில், மாயாண்டி ஜோசப் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பழிக்குப்பழியாக இந்தத் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். திண்டுக்கல்லில் அடுத்தடுத்து கணவன், மனைவி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: