200 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக் பறிமுதல்

திருச்செங்கோடு, ஜன. 8: திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட வர்த்தக பகுதிகளில், நேற்று மாவட்ட சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் ரிஸ்வானா பேகம் மற்றும் திருச்செங்கோடு நகராட்சி ஊழியர்கள் இணைந்து, அதிரடி சோதனை நடத்தினர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. வேலூர் சாலை பகுதிகளில் நடந்த இந்த ஆய்வில், மூன்று கடைகளில் இருந்து 200 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கைப்பற்றப்பட்டது. அந்த கடைகளுக்கு மொத்தம் ரூ.7500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவா, தூய்மை பாரத திட்டம் மேற்பார்வையாளர் கலைசிவன் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: