சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்

நாமக்கல், ஜன.3: நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா வளையப்பட்டி, பரளி, அரூர், என். புதுப்பட்டி ஆகிய பகுதிகளில், 882 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, நேற்று, என்.புதுப்பட்டி பஞ்சாயத்து கஸ்தூரி மலை அடிவாரத்தில், விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினார். விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணி, ராம்குமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நேற்று இரவும் விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்கு மோகனூர் போலீசார் நிறுத்தப்பட்டனர்.

Related Stories: