இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல், ஜன. 6: நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்தென்றல் இசைவாணன், பொருளாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 11 மணி அளவில் தொடங்கிய இந்த போராட்டம், மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. இதில் மாவட்ட துணைத்தலைவர் அமுதா, துணை செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: