கிரேன் ஆபரேட்டர் வீட்டில் நகை, பணம் திருட்டு

குமாரபாளையம், ஜன.3: குமாரபாளையம் வேமங்காட்டு வலசு குமரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராணி. அருகில் உள்ள தாய் வீடான சானார்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் பண்டிகை நடைபெற்றது. இதனால் ராணி அங்கு சென்று விட்டு, நேற்று காலை குமரபுரம் திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் வைத்திருந்த இரண்டு பவுன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது. இதுகுறித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் ராணி புகார் அளித்தார். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நாமக்கல்லில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் வரழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: