எவர்கிரீன் கராத்தே பள்ளி குழந்தைகள் முதலிடம்

பள்ளிபாளையம், ஜன.1: மாநில அளவிலான பள்ளி குழந்தைகளுக்கான கராத்தே போட்டியில் பள்ளிபாளையம் எவர்கிரீன் பள்ளி குழந்தைகள் முதலிடம் பெற்றனர். பள்ளிபாளையம் எவர்கிரீன் குழந்தைகள் விதேஷ், மோகனபிரதா, திகன், ஹர்ஷிகா ஆகியோர் சிறப்பாக விளையாடி முதல் பரிசை பெற்றனர்.

மாணவர்கள் தஷீத், கனிஷ் ஆகியோர் 2ம் இடத்தையும், தட்சிணாமூர்த்தி, தன்யஸ்ரீ, பவிஷ், மெய்யரசன், தமிழ் அமுதன், தேவானந்தன், நவிகா, மித்ரன் ஆகியோர் 3ம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு கோப்பை பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளை பள்ளியின் தாளாளர் கராத்தே ராஜா, பள்ளி முதல்வர் சந்தியா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

 

 

Related Stories: