சோலார் சொட்டு நீர் பாசன பயிற்சி முகாம்

சேந்தமங்கலம், ஜன.6: புதுச்சத்திரம் அடுத்த பெருமாள் கோயில் மேட்டில் சோலார் சொட்டுநீர் பாசனம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. புதுச்சத்திரம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நல துறையின் சார்பில், பெருமாள் கோயில் மேடு கிராமத்தில் சோலார் மற்றும் சொட்டுநீர் பாசனம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. துணை வேளாண் அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார். இதில் வேளாண் அலுவலர் சாரதா கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு மானிய வெளியில் சோலார் பம்பு செட், சொட்டு நீர் பாசனம், நுண்ணீர் பாசனம் மாநில அரசின் சலுகைகள், மானியங்கள் குறித்து பேசினார். முகாமில் நாமக்கல் பிஜிபி வேளாண்மை கல்லூரி மாணவிகள், வேளாண் அனுபவ பயிற்சி சோலார் மற்றும் சொட்டுநீர் பாசனம் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். அதில் மின்சாரத்திற்கு மாற்றாக சூரிய ஒளி பயன்படுத்தி, ஒரு ஏக்கர் நிலத்திலேயே கடலை, தீவனம், சோளம், வீட்டிற்கு தேவையான காய்கள், வரப்பில் மரங்கள் என சிறந்த முறையில் விவசாயம் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். முகாமில் உதவி வேளாண் அலுவலர்கள் அயஸ்கான், ஜீவிதா, வைஷ்ணவி, அட்மா தொழில்நுட்ப மேலாளர் சிந்துஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: