கொல்கத்தா: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. முகமது ஷமி அளித்த எஸ்.ஐ.ஆர். படிவத்தில் சில முரண்பாடுகள் இருப்பதால் சம்மன் அனுப்பியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக முகமது ஷமிக்கு சம்மன் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம். ஜனவரி 9, 11 தேதிகளில் முகமது ஷமியிடம் தேர்தல் அதிகாரிகள் விளக்கம் கேட்க உள்ளனர்
