ஈரான் செல்ல இந்தியா தடை

புதுடெல்லி: பணவீக்கம் மற்றும் நாணய மதிப்பு வீழ்ச்சிக்கு எதிராக ஈரான் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்திய மக்களை ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. மேலும் ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை ஈரானிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியக் குடிமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஈரானில் வகிக்கும் இந்தியக் குடிமக்கள், தூதரகத்தில் பதிவு செய்யுமாறும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: