ஐபோன் ஏற்றுமதியில் இந்தியா சாதனை

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கை: 2025ஆம் ஆண்டு ரூ.4.51 லட்சம் கோடி மதிப்புள்ள ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது. மின்னணு பொருட்களின் உற்பத்தி கடந்த 11 ஆண்டுகளில் 6 மடங்கு அதிகரித்துள்ளது. பிரதமர் மோடியின் தொலைநோக்கான தலைமையின் கீழ் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது.இந்த வளர்ச்சியானது, இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் 3 பொருட்களில் ஒன்றாக மின்னணு பொருட்கள் அமைந்துள்ளது. இந்த ஆண்டு நான்கு செமி கண்டக்டர் தொழிற்சாலைகள் துவங்கப்பட உள்ளன. மின்னணு உற்பத்தித் துறையில் தற்போது 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் இணைந்துள்ளது. இது நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியாவில் 5 ஐபோன் தொழிற்சாலைகள் உள்ளன.

Related Stories: