இந்திய அழகு சாதனங்களுக்கு பிரான்ஸ் நாட்டில் தடையா?

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் புத்தாண்டு முதல் தேதியில் இருந்து என்றென்றும் நிலைத்திருக்கும் ரசாயனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ரசாயனங்கள் பொதுவாக சமையல் பாத்திரங்கள், துணி வகைகள், தீயணைப்பு நுரைகள் மற்றும் உணவுப் பொட்டலங்களில் காணப்படுகின்றன, ஆனால் அவை அழகுசாதனப் பொருட்களிலும் பரவலாக உள்ளன. முதலில் டென்மார்க்கில் தடை விதிக்கப்பட்டது. தற்போது பிரான்ஸ் நாட்டில் இந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து அதிகமாக பிரான்ஸ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அழகு சாதன பொருட்களுக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கருத்து எழுந்துள்ளது.

Related Stories: