டிரம்ப் ஒரு கோழை என்னை கைது செய்ய முடியுமா? கொலம்பியா அதிபர் சவால்

பொகாட்டோ: டிரம்ப் ஒரு கோழை. முடிந்தால் என்னை கைது செய்யுங்கள், உங்களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் என்று கொலம்பியா அதிபர் சவால் விடுத்துள்ளார். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்குள் கடந்த வாரம் அதிரடியாக நுழைந்த அமெரிக்க சிறப்பு படையினர், அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை கைது செய்து அமெரிக்கா அழைத்து சென்று நியூயார்க் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சவால் விடுத்துள்ளார். அவர் கூறுகையில்,’ என்னை அழைத்துச் செல்லுங்கள், கைது செய்யுங்கள் உங்களுக்காக நான் இங்கே காத்திருக்கிறேன். டிரம்ப், நீங்கள் ஒரு கோழை. அவர்கள்(அமெரிக்கா) குண்டு வீசினால் இங்குள்ளோர் கொரில்லாக்களாக மாறுவார்கள். நான் மீண்டும் ஆயுதத்தை தொடமாட்டேன் என்று சபதம் செய்துள்ளேன். ஆனால் தாய்நாட்டுக்காக நான் மீண்டும் ஆயுதம் ஏந்துவேன்’ என்றார்.

Related Stories: