மத்திய ஆப்பிரிக்க குடியரசு அதிபர் தேர்தல் முடிவு

பாங்குய்: மத்திய ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. பொது வாக்கெடுப்பு பதவிக்கால வரம்புகளை நீக்க அனுமதித்ததை அடுத்து முக்கிய எதிர்க்கட்சி கூட்டணியானது தேர்தலை புறக்கணித்தது. அதிபராக இருந்த ஆர்சேஞ்ச் டூவாடெரா இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். 6 வேட்பாளர்களை அவர் எதிர்கொண்டார்.

சுமார் 2.4மில்லியன் மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து இருந்தனர். தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட தற்காலிக முடிவுகளின்படி ஆர்சேஞ்ச் 76.15சதவீத வாக்குகளை பெற்று இருந்தார். 14.66சதவீத வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்த அனிசெட் ஜார்ஜஸ் டோலோகுலே தன்னைத்தானே வெற்றியாளர் என்று அறிவித்துக்கொண்டார்.

Related Stories: