மஸ்கட்: பிரபல பாடகி சித்ராவின் சகோதரி ஷாரதா ஐயர்(52). மஸ்கட்டில் வசித்து வந்தார். ஓமன் ஏர் நிறுவனத்தின் முன்னாள் மேலாளரான ஷாரதா ஜன.2 அன்று ஓமனின் அல் தாகிலியா மாகாணத்தில் உள்ள ஜெபல் ஷம்ஸ் பகுதியின் கரடுமுரடான வாடி குல் பாதைகளில் மலையேற்றம் மேற்கொண்ட ஒரு குழுவில் பயணம் செய்தார். அந்த இடத்தின் செங்குத்தான பாறைகளும் சவாலான நிலப்பரப்பும் கொண்ட அபாய பகுதி ஆகும். இதில் ஷாரதா பலியானார். ஷாரதாவின் உடல் ஓமனில் இருந்து கேரளாவுக்குக் கொண்டுவரப்படுகிறது, கடந்த டிசம்பர் 11 அன்று இறந்த தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்கு வந்த ஷாரதா டிசம்பர் 24 அன்று மீண்டும் ஓமன் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
