ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், டிச.31: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாலவிநாயகம் தலைமை வகித்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றியதோடு, இத்திட்டத்திற்கான நிதியை குறைத்துள்ள ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் பாரதி, மாநில துணைத்தலைவர் வீர கடம்ப கோபு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு 100 நாள் வேலை திட்டம் தொடர்பான புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories: